காயத்ரி எங்க வீட்டு பெண்ணே கிடையாது... கலா மாஸ்டரின் அதிரடி

Manchu
Report Manchu in பொழுதுபோக்கு
3032Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமின் நடவடிக்கைள் பார்வையாளர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அவர் ஆரம்பத்தில் இருந்தே அவர் பயன்படுத்திய எச்சை, சேரி பிகேவியர் என்று கூறியதெல்லாம் எரிச்சலின் உச்சகட்டம்.

இவர் அடிக்கடி கெட்ட வார்த்தை பேசி வருகிறார். இது குறித்து கமல் அறிவுரை கூறினார். இதற்கு கோபம் அடைந்த காயத்ரி என்னை திருத்த என் அம்மாவுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. கமல் சாருக்கு அந்த உரிமை கிடையாது என்பது போல கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுபோல காயத்ரியின் சித்தியும், நடன இயக்குனருமான கலாவும் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, காயத்ரி பிக்பாஸ் வீட்டிற்கு போனதில் இருந்தே அவரது இன்னொரு முகத்தை பார்த்து வருகிறேன். அவர் நேரில் வந்தவுடன் கேட்கலாம் என்று இருந்தால், அவள் கமல் சாரிடம் தப்பே செய்யவில்லை என்று கூறுகிறாள்.

அவளை அவரது தாய்க்கு மட்டும்தான் திருத்தும் உரிமை உள்ளது என்று கூறுகிறாள். அப்படி என்றால், அவள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே போய் இருக்க கூடாது. அவள் வீட்டிற்கு வந்தால் அவளிடம் நான் பேசவே மாட்டேன். அவள் எங்கள் வீட்டு பெண்ணே கிடையாது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போதெல்லாம் இவளா எங்கள் வீட்டு பெண் என்று மனதுக்குள் கேட்டு கொள்வேன். இந்த விடயத்தில் நான் கமலுக்கு மட்டும்தான் சப்போர்ட் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.