ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்தம் பரணிக்கு ஏன் கொடுக்கவில்லை: சதீஷின் கேள்விகளுக்கு தடுமாறி நின்ற கமல்

Report Aravinth in பொழுதுபோக்கு
1342Shares

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பார்த்து வாரத்திற்கு இருநாள் மட்டும் கமல்ஹாசன் வந்து பேசுவார்.

அதன்படி, இன்றைய தினம், வழக்கம் போல் கமல்ஹாசன் அவர்களுடன், ஸ்ரீபிரியா மற்றும் சதீஸ் வந்துள்ளனர்.

அப்போது, சதீஸ் மற்றும் ஸ்ரீபிரியா கமலிடம் பிக்பாஸ் குறித்து சரமாரியாக பல கேள்விகளை கேட்டனர்.

அப்போது, சினேகனின் கட்டிபிடி வைத்தியம் பற்றியும் ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றியும் கேள்வி எழுப்பினர்.

அதில், ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்தம் ஏன் பரணிக்கு கொடுக்கவில்லை எனக் கேட்டதற்கு முதல்முறையாக கமல்ஹாசன் அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திகைத்து நின்றதைப் பார்க்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து பிக்பாஸிடமும், தாங்கள் ஏன் ஆரவ் கொடுத்த மருத்து முத்தத்தை ஒளிபரப்பவில்லை எனக் கேட்டதற்கு, பிக்பாஸ் கூறிய பதிலானது, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் நேரம் குழந்தைகள் தொலைக்காட்சிப் பார்க்கும் நேரம் என்பதால் இதை ஒளிபரப்ப இயலாது எனத் தெரிவித்தார்.

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓரளவிற்கு தமிழர் மரபு கடைபிடிக்கபடுகிறது என்பதை அறிய முடிகிறது.