பிக்பாஸில் இன்றைய புதுவரவு இவர்களில் ஒருவரே... எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள்

Report
2987Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு பிரபல நடிகை கலந்து கொள்ளப் போகிறாராம். ஓவியா வெளியே சென்ற பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாசியமாக இல்லாமல் ரசிகர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் புது நடிகை ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்களாம். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

கல்யாணம் முதல் காதல் வரை ரிவி சீரியல் புகழ் ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வரப்போவது நந்திதாவா, ப்ரியாவா என்பது இன்று இரவே தெரிய வரும்.

அதுமட்டுமின்றி ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இன்று இரவு வரப்போகும் புதுவரவு யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.