பிக் பாஸ் வீட்டில் கமெராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர்

Report
4098Shares

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு வெளியேற்றப்பட்டுள்ளார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே தெலுங்கு நிகழ்ச்சியும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

பர்னிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் தெலுங்கு காமெடி நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவால் ஒரே வீட்டிற்குள் இருக்க பிடிக்கவில்லை. இதனால் அவர் புலம்பி வந்தார்.

எனக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை, உடல்நலம் சரியில்லை, என்னை வெளியே விடாவிட்டால் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று கேமராவுக்கு முன்பு நின்று மிரட்டினார்.

சம்பூர்ணேஷுக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பெரும் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் சிசிடிவி கேமராவையும் அடித்து உடைத்துவிட்டார்.

சம்பூர்ணேஷின் நடவடிக்கைகளை பார்த்த சக போட்டியாளர்கள் அவரை உடனே வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

147958 total views