பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறப்போவது இவர் தான் உறுதியாக கூறிய பரணி

Report
1113Shares

சமூக வலைதளங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, இல்லை சிறிய கிராமத்திலிருந்து நகரம் வரையிலும் சரி அனைவரும் அதிகமாக பேசப்படும் ஒரு விடயம் என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிகழ்ச்சியில், பல சர்ச்சைகளும், சச்சரவுகளும் தினம் தினம் இடம்பெறுவது தற்போது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் திங்கட்கிழமை பிக்பாஸ் போட்டியாளரும், காமெடி நடிகருமான பரணி வீட்டின் விதிகளை மீறி சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார். இதனால், அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும், வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் வீட்டில் உள்ளவர்கள் பற்றியும், அந்த வாரத்தில் வெளியேற்றப்படுபவர் பற்றியும் பேசுவார்.

அந்த வகையில், இந்த வாரம் பரணியை அழைத்து தப்பிக்க முயன்றதற்கான காரணம் குறித்து கேட்டறிந்ததுடன், அவரிடம் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்ட பொழுது,

பரணி கூறியதாவது, நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் போது bye என்று ஒரு சத்தம் கேட்டது. அந்த சத்ததிற்குரியவர் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார்.

இதை ஓவியா தான் பரணியை பார்த்து கூறினார். எனவே அவர் ஜெயிக்க வேண்டும் என்று பரணி விரும்புகிறார் என்றே தோன்றுகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

28243 total views