ஜுலியின் சபதம் ஜெயித்தது... கண்கலங்காமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஆர்த்தி...

Report
2151Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதற்கு பதில் தற்போது கிடைத்துள்ளது.

ஓவியா மற்றும் வையாபுரி வோட்டு அடிப்படையில் வெளியேறபோவதில்லை என அறிவித்த கமல். வெளியேறப்போவது ஆர்த்தியா அல்லது ஜூலியா என சில நிமிடங்கள் சஸ்பென்ஸ் வைத்த கமல், இறுதியில் ஆர்த்தி வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கமல் வைத்த சஸ்பென்ஸால் கதறிய ஜுலி தற்போது ஆனந்தக் கண்ணீர் வடித்தது மட்டுமின்றி, சந்தோஷத்தை கூறுவதற்கு வார்த்தையே இல்லை என்று கூறியுள்ளார். மறுபுறம் ஆர்த்தி கண்ணீர் சிந்தாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். இவர் கண்ணீர் சிந்தாமல் வந்ததற்கு காரணம் தனது அப்பாவிற்கு கொடுத்த வாக்கு என்றும் கூறியுள்ளார்.

69818 total views