இன்று பிக்பாஸிலிருந்து வெளியேறுகிறாரா வையாபுரி?.. அம்பலமாக்கிய ஆடியோ

Report
2542Shares

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி இன்று திட்டமிட்டபடியே வெளியேறக் கூடும் என்பதை அவரது மனைவி பெயரில் உலா வரும் ஆடியோ அம்பலப்படுத்தி உள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சர்ச்சைகள்தான். சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதன் உச்சமாக சேரி பிஹேவியர் என வக்கிரத்தைக் கொட்டினார் காயத்ரி ரகுராம். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விளக்கமளித்த கமல்ஹாசனின் ஆணவ பேட்டியும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது வையாபுரியா? ஜூலியா? ஆர்த்தியா? என்கிற ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி தான் வெளியேறக் கூடும். சமூக வலைதளங்களில் வையாபுரியின் மனைவியின் குரல் என்கிற பெயரில் ஒரு ஆடியோ பரவி வருகிறது.

அதில், நிறைய வேலைகள் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் அல்லது 2 வாரத்தில் எலிமினேட் ஆகிடுவேன்னு சொல்லிவிட்டுதான் வையாபுரி போனார் என்கிற தகவல் இடம்பெற்றிருக்கிறது. அதனால் நிச்சயம் வையாபுரி திட்டமிட்டபடியே இன்று வெளியேறிவிடுவார் என கூறப்படுகிறது.

ஆடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

92454 total views