விவாகரத்திற்கு பின் இப்படி ஒரு உறவா? பிரபல நடிகையின் பதில்!

Report Printha in பொழுதுபோக்கு
1336Shares

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும், தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

நடிகை சுரபி லட்சுமி, விபின் சுதாகர் என்ற இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுரபியும், விபினும் கடந்த ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே இவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

சுரபி, விபினுக்கு கடந்த 12-ம் திகதி விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விபின் சுரபியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்.

சுரபியும், விபினும் ஒருவரை பற்றி மற்றொருவர் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. விவாகரத்திற்கான காரணத்தை சொல்ல மறுத்த சுரபி, இனி நானும், விபினும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறியுள்ளார்.