பேச மறுக்கும் உறவுகள் - கண்ணீர் விடும் காமெடி நிஷா

Report
2591Shares

கலக்கப்போவது யாரு காமெடி ஷோ மூலம் பலரையும் சிரிக்கவைத்தவர் அறந்தாங்கி நிஷா. என்னை மாதிரி ஒரு அழகு என அடிக்கடி சொல்லி சிரிப்பு மூட்டுவார். தன் டிவி பயணம் குறித்து பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ரொம்ப சந்தோசம். இந்த மாதம் 21 ம் தேதி வரை கால்ஷீட் இருக்கிறது. என்னோட ஷோ பண்ணும் பழனியும் நானும் ஒரு படம் பண்ணிருக்கோம்.

என்னோட கணவருக்கு ஹீரோ ஆசை வந்திருச்சு. அவருக்காகவும் ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணிருக்கேன். இப்படி ஒரு பிரபலமான பிறகு என்னுடைய உறவுகளை இழந்துட்டேன். என்ன சுத்தி ஒரே கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். இப்போ ஷோ ல பிசியா இருக்கிறதால டைம் கிடைக்கல.

நீ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் குடும்பத்தில இருக்கிறவங்க தான் கடைசி வரைக்கும் வருவாங்கனு சொல்றாங்க. அப்ப ரொம்பவே கஷ்டமா இருக்கும். இப்போலாம் அவங்க என்னோட பேச மாட்டிங்கிறாங்க. என் பையனையும் ரொம்ப மிஸ் பண்றேன் என நிஷா கண்கலங்கியுள்ளார்.

83690 total views