மண்ணில் வீழ்ந்தும் வரிகளில் வானத்தை அளந்த கவிஞன்! திடீர் மரணத்தினால் அதிர்ந்து போன திரையுலகினர்!..சோகத்தில் கண்ணீர் விடும் ரசிகர்கள்

Report
405Shares

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கவிஞர் நா முத்துக்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

அவரது திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் இலக்கியவாதிகள், இசைபிரியர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இயக்குநர் கனவோடு திரைத்துறைக்கு வந்து பாடலாசிரியரான கவிஞர் நா முத்துக்குமார் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.

அவரது 43வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

14329 total views