தீடீரென கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை!.. தற்போதைய நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Report
1653Shares

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் கண்கலங்கியுள்ளனர்.

தமிழில் வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் வெளியான தமிழில் அறிமுகமான நடிகை சோனாலி பிந்த்ரே, சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்த பதிவில் சில நேரங்களில் வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. ஆனால் என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

எனக்கு புற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற அமெரிக்காவிற்கு வந்துள்ளேன்” என்றூ கூறி இருந்தார்.

சோனாலி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பல நடிகர், நடிகைகளும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு ஆதரவாகவும், விரைவில் சோனாலி உடல் நலம் தேறி இந்தியா திரும்பவும் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சோனாலி கிமோ சிகிச்சை பெறுவதற்கு முன் தனது முடிகளை நீக்கியுள்ளார்.

51643 total views