அடித்தது ஜாக்பாட்! கதாநாயகியாக உருவெடுக்கும் தெய்வமகள் சத்யா..!

Report
729Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து குடும்பப் பெண்கள் மட்டுமல்லாமல் இளசுகளின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் பிரபல நடிகை வாணி போஜன்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது.

அதன்பின் நடிகை வாணி போஜன் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில், அவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, ”My Son is Gay” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் என்பவர் தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் தலைப்பு N4 என வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, காசிமேடு துறைமுக சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடப்பது போல் கதையம்சம் கொண்டதாக இப் படம் அமையவுள்ளது.

28656 total views