அடப்பாவி…! நடிகர் ஆர்யா பெண் தேடியது இதுக்கு தானா?

Report
2026Shares

பல ஹிட் படங்களான நான் கடவுள், மதராச பட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, கடம்பன் உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் ஆர்யா..

ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் அதிகமாக வந்தன. பின் நயன்தாராவுடனும் இணைத்து பேசப்பட்டார். இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் தேடுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

‘நான் திருமணம் செய்து கொள்ள பெண் தேடுகிறேன் விருப்பம் உள்ளவர்கள் இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள்’ என்ற அறிவிப்பை வெளியிட்டு, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகர் ஆர்யா. இதனை நம்பி பல பெண்கள் அந்த நம்பருக்கு போனும் செய்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் அதில் இப்படியொரு பிரச்சனை இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்ன பிரச்சனை என்றால், இந்த யோசனையை ஆர்யாவிற்கு கொடுத்தது ‘கலர்ஸ்’ எனும் டிவி சேனல் தானாம். மேலும் ஆர்யாவிற்கு பொருத்தமான பெண் தேடும் படலத்தை ‘எங்கள் வீட்டு மாப்பிளை’ என்ற நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, போன் செய்த பெண்கள் அனைவரையும் வைத்து ரியாலிட்டி ஷோ நடந்துக்கொண்டிருக்கின்றது, மேலும் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதில் வெற்றி பெரும் பெண்ணை உண்மையாகவே ஆர்யா திருமணம் செய்வாரா அல்லது வழக்கம் போல தான் நடந்துக்கொள்வாரா என தெரியவில்லை, பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

82018 total views