தன் மகள் குறித்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த கௌதமி!

Report
1231Shares

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இதனை தொடர்ந்து இதன் தமிழ் பதிப்பான ‘வர்மா’ வில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பது அனைவரும் அறிந்ததே, மேலும் இவருக்கு ஜோடி யார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் இவருக்கு ஜோடியாக கௌதமி மகள் சுப்புலட்சுமி நடிக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை கௌதமி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய மகள் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் எனவும், அவர் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

45237 total views