விருது வழங்கும் விழாவிற்கு செம போதையில் வந்த பிரபல தொகுப்பாளர்!

Report
355Shares

சின்னத்திரையில் பணிபுரிபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில், பிரபல தொகுப்பாளர் மா.கா.பா சரக்கடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சிறந்த சீரியல் நடிகர், நடிகை, தொகுப்பாளர், தொகுப்பாளினி உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவித்தது.

இதில் சிறந்த தொகுப்பாளராக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘அது இது எது’ மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மா.கா.பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த விருதை பெற அவர் மேடைக்கு வந்த போது, மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்க, இவர் வேறொரு பதிலை கூறியுள்ளார்.

இவர் தற்போது சினிமாவிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். வளர்ந்து வரும் வேளையில் இப்படி நடந்து கொள்வது சரியா? என சின்னத்திரையில் பலரும் கேள்வி எழுப்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


11424 total views