ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு விபத்து!!

Report
141Shares

ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்து, இன்னொரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் ஆதி.

ஆனால், இந்தப் படத்தை அவர் இயக்கவில்லை. அறிமுக இயக்குநரான பார்த்திபன் தேசிங்கு இந்தப் படத்தை இயக்குகிறார். இதில், ஹாக்கி பிளேயராக நடிக்கிறார் ஆதி. இதற்காக முறைப்படி ஹாக்கி பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

இருந்தாலும், படப்பிடிப்பின்போது ஆதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சைக்குப் பிறகே அவரால் நடிக்க முடியும் என்கிறார்கள்.

5145 total views