காதல் நாயகன் கரட்டாண்டி அருணின் தற்போதைய சோக கதை...!!

Report
900Shares

பரத், சந்தியா நடிப்பில் வெளிவந்து ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்திய படம் காதல். தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இது உள்ளது. இப்படத்தில் கரட்டாண்டி என்ற கதாபாத்திரத்தில் வந்து நகைச்சுவையில் கலக்கியவர் அருண்.

இதனை தொடர்ந்து இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆனார். இதில் விஜய் நடித்த சிவகாசியும் ஒன்று. ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகளும் வரவில்லை. சினிமாவில் சோபிக்கவும் முடியவில்லை.

எனவே இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக எந்த ஒரு படத்திலும் இவரை காணவில்லை.

அருண் வாய்ப்பிற்காக அலைந்தும் எந்த ஒரு படமும் இவருக்கு கிடைக்காததால் தற்போது தன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டாராம்.

இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி தான். அங்கு சிறுதொழில் ஒன்றை செய்து வருகின்றாராம். இப்படி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் திரும்பியவர்கள் பல லட்சம் பேர், அதில் ஒருத்தராக அருணும் ஆகிவிட்டார்.

30863 total views