பல பெண்களை சூறையாடிய பாகுபலி நடிகர்….

Report
489Shares

வெங்கடபிரசாத் நடிப்பது மட்டுமில்லாமல், ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் மல்டிபிளக்ஸின் மேனேஜராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அங்கு பணிபுரிந்து வரும் ஒரு பெண் போலீசாரிடம் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 7 வருடங்களாகவே பிரசாத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அதில் இரு முறை தான் கர்ப்பமானதாகவும், ஆனால், வலுக்கட்டாயமாக பிரசாத் கருவை கலைக்க வைத்துவிட்டார் எனவும் புகார் அளித்துள்ளார்.

மேலும், திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வலியுறுத்தியும், அதை பிரசாத் தவிர்த்து வருவதாகவும், தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கணவனிடமிருந்து பிரிந்து வாழும் அப்பெண்ணை, விவாகரத்து பெறும் முன்பே தனது வலையில் பிரசாத் வீழ்த்தி அவரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பதால், அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரசாத் பல பெண்களை இப்படி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20505 total views