வைரலாகும் நமீதாவின் திருமண அழைப்பிதழ்...

Report
452Shares

கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்தவர் குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதா. எங்கள் அண்ணா, ஏய், பில்லா, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் தனக்கும் வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களது திருமணப் பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 22ம் திகதி மாலை வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற இருக்கிறதாம்.

18305 total views