நடிகர் ஆர்யாவிற்க்கு திருமணமா? அவரே கூறிய தகவல்!!!

Report
1199Shares

அறிந்தும் அறியாமலும் படம் மூலம் அறிமுகம் ஆன ஆர்யாவின் திருமணம் திரை உலகினர் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. என் என்றால் அவர் திருமணமே செய்ய மாட்டேன் என்று கூறிவந்தார்.

மேலும் ஆரியா மிகவும் நகைச்சுவை தன்மை கொண்டவர் அனைவரையும் கிண்டல் அடித்து கொண்டே இருப்பதால் இவரை திருமணம் செய்து கொள்ளும் பெண் மிகவும் பாவம் என்றும், ஆனாலும் இவருக்கு எப்படியாவது கால் கட்டு போட்டு விட வேண்டும் என்று அனைவரும் கூறுவதுண்டு.

இந்நிலையில் தற்போது அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஆர்யா பயிற்சி செய்வது போலவும் அங்கு ஒருவர் வந்து தம்பிக்கு ஜூன் மாதம் கல்யாணமாம் உனக்கு எப்போது கல்யாணம் என்று கேட்கிறார்?

அதற்கு ஆர்யா ஏப்ரலில் என்று கூறினார். அதற்கு முன்பாக பெண் வேண்டும் என்று சமூகவலைதளங்களிலும், செய்தித்தாள்களிலும் வேண்டும் என்று விளம்பரம் செய்யலாம். அப்போதாவது பெண் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்கிறார்.

இது உண்மையில் அவர் கல்யாணம் செய்வதின் முன்அறிவிப்பாக எடுத்துக்கொள்வதா இல்லை இதுவும் விளையாட்டு என்று எடுத்துக்கொள்வதா என்று ரசிகர்கள் குளம்பியுள்ளனர்.

41317 total views