நட்சத்திர திருமணங்கள்

Report
339Shares

திரையுலகில் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொண்டது பல உதாரணங்கள் உண்டு. அதே போல் டெக்னீசியன்களும் நட்சத்திரங்களை கரம் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் ஐந்து நட்சத்திர ஜோடிகள் இல்லறம் புக உள்ளனர்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். வரும் அக்டோபர் 6-ந் தேதி இவர்களின் திருமணம் பிரமாண்டமாக ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை இருவரும் பிரபலங்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாள பட உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த பாவனா, தயாரிப்பாளர் நவீனை மணக்க உள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிந்த நிலையில், அக்டோபர் 26-ந் தேதி திருவனந்தபுரத்தில் இவர்களின் திருமண விழா நடைபெறுகிறது. இதற்கான பத்திரிகைகள் மலையாளப்பட உலகிற்கு வழங்கி வருகின்றனர்.

அதே போல் பாரிஜாதம் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான தரண்குமாருக்கும், நடிகையும் பிரபல மாடலுமான தீக்ஷிதாவுக்கும் காதல் திருமணம் வரும் 15-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

அன்று மாலை 6 மணியளவில் கிண்டி ஹில்டன் ஹோட்டலில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும் யாமிருக்க பயமேன், பொன்மாலைப்பொழுது போன்ற படங்களில் நடித்த நடிகர் ஆதவ் கண்ணதாசனுக்கும், மாடல் வினோதினிக்கும் திருமணம் டிசம்பர் 6-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதேபோல் வில் அம்பு படத்தில் நடித்த நடிகை சம்ஸ்கிருதி ஷெனாய்க்கும் விஷ்ணு எஸ் நாயருக்கும் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

கோலிவுட், மல்லுவுட், டோலிவுட்டில் நடைபெற உள்ள இந்த நட்சத்திர திருமணங்களால் திரையுலகம் களை கட்ட தொடங்க உள்ளது.

13907 total views