பெண்களுக்கு பாதுகாப்பில்லை என வெளியேற்றப்பட்ட பரணி வெற்றியாளர் - கமல்ஹாசன்

Report Nivetha in சினிமா
985Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் எதையோ ஒன்றை செய்ய அது வேறுவிதமாக தெரிகிறது. அவர்களுக்குள் சண்டை, வாக்குவாதம் இவைதான் நிகழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது.

இன்றைய தினம் ஓவியா மற்றும் வையாபுரி ஓட்டு அடிப்படையில் வெளியேறபோவதில்லை என கமல் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வெளியேறப்போவது ஆர்த்தியா அல்லது ஜூலியா என சில நிமிடங்கள் சஸ்பென்ஸ் வைத்த கமல், இறுதியில் ஆர்த்தி வெளியேறுவதாக தெரிவித்தார்.

அது மட்டும் அல்ல நிகழ்ச்சிக்கு மீண்டும் பரணியை அழைத்து கமல் நடந்தது என்ன என்பது குறித்து விவாதம் செய்கிறார்.

பரணியின் தன்னம்பிக்கை தகர்க்கப்பட்ட விதம். அது மீண்டும் துளிர்விட்ட தருணம். என அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.

இதன்போது கமல் என்னை பொறுத்தவரை நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்தவர்தான் என்று கூறியுள்ளார். அப்போது பரணி கமல் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்றார்.

மீண்டும் கமல் பரணியை கட்டியணைத்து வாழ்த்துக்கள் வெற்றியுடன் செல்க என்று தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார்.