சத்யஜோதி பிலிம்ஸ் விவேகம் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Report
69Shares

சிவா இயக்கத்தில் விவேகம் படத்தின் டப்பிங் பணிகளை மூன்றே நாட்களில் அஜித் தனது டப்பிங் பகுதியை சிறப்பாக முடித்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தின் டப்பிங் வேலை முழுமையடைந்துள்ள நிலையில், ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் விவேகம் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடப் போகிறோம் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள்.

அதில் சர்வைவா, தல விடுதலை ஆகிய இரு பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மொத்த பாடல் ஆல்பமும் இம்மாத இறுதியில் வெளியாகி, நேரடியாக கடைகளில் விற்பனைக்கு வருகிறது. இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். அஜித் ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாஸனும் நடித்துள்ளனர்.

அக்ஷராவின் முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

1988 total views