பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 பிரபலங்கள்தான் உள்ளனர்!

Report Pious in சினிமா
187Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பிரபலங்களில், தற்போது 11 பிரபலங்கள்தான் உள்ளனர். இந்த வாரத்திற்கான தலைவர் கணேஷ் வெங்கட்ராம்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த மன உளைச்சல் காரணாமாக வெளியேற முயன்ற பரணி, விதிமுறைகளை மீறினார் என வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரபலங்கள் பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் எலிமினேஷன் பட்டியலில் ஆர்த்தி, ஜூலி, ஓவியா, வையாபுரியின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து இன்று வந்த புரொமோவில் ஜுலி ஒரு சபதம் செய்துள்ளார்.

நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவளாகவே நடிப்பது என்று ப்ரொமோ வீடியோவில் கேட்கிறார் ஜூலி.

மேலும் நான் இந்த வீட்டை விட்டு போவதற்குள் ஆர்த்தி அக்கா வெளியே போகனும்.

எங்கள் இருவரை வைத்து ஒரு ஷோ நடக்கும் என்று கூறியுள்ளார்.