சொட்டைத் தலையில் முடி வளரும்! வளர்ச்சியைத் தூண்டும் பாட்டி வைத்தியங்கள்!

Report
336Shares

தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன.

அதில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளும் அடங்கும். பல ஆண்களுக்கு சொட்டைத் தலையே அவர்களது தன்னம்பிக்கையை குறைத்துவிடுகிறது.

இங்கு சொட்டைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா...!

வெங்காயம்

வெங்காய பேஸ்ட் மசாஜ் வழுக்கைத் தலைக்கு வெங்காயம் சிறப்பான பலனைத் தரும்.

அதற்கு சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால், வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சிக்கு உதவும்.

முட்டை மஞ்சள்

கரு ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வர, சொட்டையில் முடி வளர்வதைக் காணலாம்.

10601 total views