அக்குள் கருமையை போக்க இதில் ஒன்றை பின்பற்றுங்கள்!

Report
242Shares

சருத்தில் மடிப்பு விழுந்த இடங்கள், மூட்டுக்கள் இணையும் இடங்கள் போன்றவை கருமையாக இருக்கும்.

சிலருக்கு அக்குள் மிகவும் கருப்பாக இருக்கும், அப்படி உள்ளவர்கள் அக்குளில் உள்ள கருமையை போக்க ஒருசில இயற்கை பொருட்களை பயன்படுத்தினாலே போதும்.

அக்குள் கருமையை போக்குவது எப்படி?

தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதை அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, கழுவி, உலர வைக்க வேண்டும்.

வெள்ளரிக்காயை தினமும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும் அல்லது வெள்ளரிக்காய் சாற்றில், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் கலந்து, அக்குளில் தடவி உலர வைக்கலாம்.

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அதனுடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இதை 2 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் அக்குள் கருமை நீங்கும்.

குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து ஈரமான பஞ்சு கொண்டு துடைத்த பின் நீரில் கழுவ வேண்டும்.

8445 total views