இறைச்சியை ஆடையாக அணிந்த அழகு ராணிகள்.

Report
340Shares

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் முகமாக பிரேஸிலில் நடந்த “மிஸ் பம் பம் பிரேஸில்” என்ற அழகு ராணிப் போட்டியில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவு செய்தவற்கான போட்டியில் பங்குபற்றிய பெண்கள் சிலர் இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து வந்துள்ளனர்.

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் போட்டியில் பங்குபற்றிய பெண்கள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம்.

பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலேல் அண்மையில் “மிஸ் பம்பம்” போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியைத் தமது நீச்சலுடைகைளுக்கு மேலாக போட்டியில் பங்குபற்றிய பெண்கள் ஆடை போல் அணிந்திருந்தனர்.

”பெண்கள் வெறும் இறைச்சித் துண்டு அல்ல எனன்பதை உணர்த்துவதே தமது நோக்கம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

11495 total views