சுறாவை காப்பாற்றிய பெண்ணின் வைரல் காணொளி

Report
96Shares

ஆஸ்திரேலிய பெண் ஒருவர், நீச்சல் குளத்தில் சிக்கிய சுறா மீனை பதட்டமில்லாமல் தூக்கி கடலில் விடும் காட்சி வைரலாகி வருகிறது.

சிட்னியில் உள்ள நீச்சல்குளத்தில் மெலிசா ஹத்ஹையரின் என்ற பெண் நீந்திக்கொண்டு இருந்த போது அந்த மீன் அங்கு சிக்கிக்கொண்டுள்ளது என்பது தெரியவந்ததுள்ளது.

`போர்ட் ஜாக்சன்` வகையை சேர்ந்த் சுறா மீன் முதலில் துயரத்தில் இருந்தது போல தெரிந்தது. மேலும் அது மலை போல் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகை சுறா மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆதனால் தான் அதன் மீது தாவி. வால்களை எனது கால் முட்டியால் பிடித்து பின்பு கழுத்து பகுதியை கைகளால் பிடித்து தூக்கினேன்.

அதனால் என்னை தாக்க முடியவில்லை என்பதனை உணர்ந்தேன். மேலும் பெரிய அலைகளின் காரணமாக, கடலில் இருந்த அந்த சுறா மீன், பக்கத்தில் இருந்த நீச்சல்குளத்தினுள் விழுந்து இருக்கலாம் என சந்தேகித்தவாறு அதனை கடலினுள் விட்டேன். பிறகு அது வேகமாக நீந்தி சென்றது என்றார்.

அவர் சுறாவை காப்பாற்றும் காணொளியை பார்ப்போர், அவர் செய்தது, "ஆஸ்திரேலியர்களுக்கே இயல்பான ஒன்று" என்றும், "மிகவும் சிறந்தது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.