சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்... உங்க நட்சத்திரத்திற்குரிய பலன் என்ன?

Report
1297Shares

ராசிகளின் படி சனிப்பெயர்ச்சியினை தெரிந்து கொண்ட நீங்கள் உங்களது நட்சத்திரத்தின் படியும் சனிப்பெயர்ச்சி பலன்களை தெரிந்து கொள்ளலாம். 19.12.2017 முதல் 28.03.2020 வரை

அஸ்வினி

வைராக்கிய குணத்தால் அனைத்து விஷயங்களையும் சாதித்துக் கொள்ளும் அஸ்வினி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வு வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சனி சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.

குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன்மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நன்மை பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள், எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் உயரும், கடன்கள் குறையும். வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

அரசியல்துறையினருக்கு பொருளாதார நிலை மேம்படும். மேலிடத்துடன் ஒற்றுமை பலப்படும். மாணவர்கள் நன்கு படித்து பிறர் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

உங்களது ப்ளஸ் : தைரியம் அதிகரிக்கும்.

உங்களது மைனஸ் : முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.

பரணி

அறிவார்ந்து செயல்படும் பரணி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தால் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.

குடும்பத்தாருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது, கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தி தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். பிறருடைய பிரச்னை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

உங்களது ப்ளஸ் : பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

உங்களது மைனஸ் : வாக்கு கொடுக்கும் முன் யோசித்து கொடுக்கவும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

கார்த்திகை

வேகமான நடவடிக்கைகளால் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தார் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். கலைத்துறையினர் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாகப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

உங்களது ப்ளஸ் : எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி.

உங்களது மைனஸ் : பணவரவில் அதிருப்தி

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர, காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9.

ரோகிணி

வசீகரமான பேச்சால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடுவது நன்மை தரும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. பெண்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள், வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

உங்களது ப்ளஸ் : குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

உங்களது மைனஸ் : நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து வேற்றுமை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

மிருகசீரிடம்

எந்த வேலையையும், வேகமான நடவடிக்கைகளால் சரியான நேரத்தில் செய்யும் மிருகசீர்ஷ நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி, தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தாரால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

உங்களது ப்ளஸ் : உத்தியோகம், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

உங்களது மைனஸ் : எடுத்துக் கொண்ட காரியங்களில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க திட்டமிடுதல் அவசியம்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கிவர, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

திருவாதிரை

சாமர்த்தியமும், நுணுக்கமும் நிறைந்த திருவாதிரை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தாரால் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவி இருவரும் கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.

உங்களது ப்ளஸ் : பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உங்களது மைனஸ் : குடும்பத்தினரிடம் பேசும்போது கவனம் தேவை.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9.

புனர்பூசம்

எந்தக் கடினமான சூழ்நிலையையும் நிதானமாகவும், நிறைவுடனும் அணுகும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும்.

உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு உடனே விலகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிவட்டார பழக்க வழக்கங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. மாணவர்கள் கவனத்தைச் சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

உங்களது ப்ளஸ் : பணவரத்து அதிகரிக்கும்.

உங்களது மைனஸ் : அடுத்தவர்களின் செயல்களால் டென்ஷன் ஏற்படலாம்

பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

பூசம்

கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யும் திறன் படைத்த பூச நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் நட்சத்திராதிபதி சனியின் சஞ்சாரத்தால் மனக்கலக்கம் நீங்கும். எவ்வளவு திறமையாகச் செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியிருந்த நிலை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவுகளால் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண, கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தார் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்றுவிடுவது நல்லது. அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குபின் முன்னேற்றம் அடைவார்கள். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

உங்களது ப்ளஸ் : குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.

உங்களது மைனஸ் : மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம்.

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க, மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.

ஆயில்யம்

கொண்ட நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் ஆறாமிட சனியின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்தபடி காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். ஆனாலும் பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பெரியோர் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பதவிகள், கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக நிலவிவந்த குடும்பம் சார்ந்த பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

உங்களது ப்ளஸ் : பணவரத்து நன்றாக இருக்கும்.

உங்களது மைனஸ் : குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க, காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.

மகம்

வாழ்க்கையில் சுயம்புவாகத் திகழ்ந்து வெற்றிபெறும் மக நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமர்ந்துள்ளார். இதனால் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம்.

சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தாரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளை அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

உங்களது ப்ளஸ் : முயற்சிகளில் வெற்றி.

உங்களது மைனஸ் : திட்டமிட்ட பணிகளில் தொய்வு.

பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.

பூரம்

உலக மக்கள் அனைவரையும் தன் மக்களாக பாவிக்கும் மனம் கொண்ட பூர நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்புகள் விலகும். வயிற்று கோளாறு ஏற்படும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒருவித பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கே காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். ஆனாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தாரால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் வாக்குவாதங்களையும், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களையும் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மனக் குழப்பம் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

உங்களது ப்ளஸ் : பணவரவு நன்றாக இருக்கும்.

உங்களது மைனஸ் : இனம் புரியாத பயம் ஏற்படலாம்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கிவர எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

உத்திரம்

உழைப்பிற்கும், சிக்கனத்திற்கும் பெயர் பெற்ற உத்திர நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பேச்சில் இனிமை மற்றும் சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின்போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தார் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி, உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.கலைத்துறையினருக்கு போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உங்களது ப்ளஸ் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உங்களது மைனஸ் : எடுக்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9.

அஸ்தம்

பொழுதுபோக்கிற்கும் கேளிக்கைகளுக்கும் இடம் கொடுத்தாலும் செய்யும் வேலைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஹஸ்த நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண் செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதும், வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். கலைத்துறையினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் எடுக்கும் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதவகையில் தடங்கல்கள் ஏற்படலாம்.

உங்களது ப்ளஸ் : மன வலிமை அதிகமாகும். அரசாங்க ரீதியில் அனுகூலம் ஏற்படும்.

உங்களது மைனஸ் : குடும்பத்தினரிடம் பேசும்போது கவனம் தேவை.

பரிகாரம்: அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்னைகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

சித்திரை

பணத்தைவிட மனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி, எல்லாம் திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்னைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

உங்களது ப்ளஸ் : போட்டிகள் குறையும்.

உங்களது மைனஸ் : எதிர்காலம் பற்றி மனக் குழப்பங்கள் அதிகமாகும்.

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபடுவதால் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

சுவாதி

குணத்திலும் நடவடிக்கையிலும் அடிக்கடி மாற்றங்களைக் கொண்டிருக்கும் ஸ்வாதி நட்சத்திர அன்பர்களே இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாய்க்கு ருசியாக உண்பீர்கள். காரியதாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். ஆனாலும் உங்களைக் கண்டு அடுத்தவர் பொறாமைபடக்கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவி இருவரும் கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை உண்டாகலாம். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

உங்களது ப்ளஸ் : முயற்சிகள் வெற்றி தரும்.

உங்களது மைனஸ் : தந்தை வழி உறவினர்களுடன் மனக்கிலேசம் ஏற்படலாம்.

பரிகாரம்: ஸ்ரீநரஸிம்மரை தினமும் வணங்கிவர காரியத்தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9.

விசாகம்

கொடுத்த வேலையை சரியான முறையில் முடிக்கும் திறன் படைத்த விசாக நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பீர்கள். பெண்களுக்கு, கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருடன் உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.

உங்களது ப்ளஸ் : அனைவரிடத்திலும் உறவு சுமுகமாக இருக்கும்.

உங்களது மைனஸ் : சோம்பல் அதிகரிக்கும்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவன் ஆலயத்திற்குச் சென்று தினமும் நவகிரக சந்நதியில் உள்ள சனிபகவானை தரிசித்து வாருங்கள். தடைகள் அனைத்தும் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

அனுஷம்

எந்த வேலையையும் அதிக சிரத்தையுடனும் அதீத முயற்சியுடனும் செய்யும் அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில், காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

உங்களது ப்ளஸ் : குடும்ப நிலை சிறக்கும்.

உங்களது மைனஸ் : எடுத்த காரியங்களில் தடை.

பரிகாரம்: குலதெய்வத்தையும் முன்னோர்களையும் தினமும் வணங்கி வாருங்கள். மன நிம்மதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.

கேட்டை

சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் எறும்பு போன்று சுறுசுறுப்பாகத் திகழும் கேட்டை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும், புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினர் விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும். பிரச்னைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

உங்களது ப்ளஸ் : பணவரத்து நன்றாக இருக்கும்.

உங்களது மைனஸ் : உத்தியோகத்தில் மாறுதல்கள் வரலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரவும். மனக்கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.

மூலம்

அனைத்து விஷயங்களிலும் நேர்மை, நிதானம், ஒழுக்கம் கொண்டு வாழ்வில் முன்னேறும் மூல நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் உங்கள் நட்சத்திரத்திலேயே சஞ்சரிப்பதால் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனக்குழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக அமையலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

உங்களது ப்ளஸ் : தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.

உங்களது மைனஸ் : குடும்பத்தில் சலசலப்பு ஏற்படலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அர்ப்பணித்து வணங்கி வாருங்கள். வீண் அலைச்சல் குறையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.

பூராடம்

கலைநயம் அதிகம் கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே, நீங்கள் தன்னம்பிக்கை கொண்டவர். இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சில் இனிமை மற்றும் சாதூர்யத்தால் எடுத்த காரியத்தைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தாருடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துகளை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சு மற்றும் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பொருளாதார விவரங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.

உங்களது ப்ளஸ் : எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

உங்களது மைனஸ் : அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

பரிகாரம்: பெருமாள் கோயிலிலுள்ள தாயாரை தினமும் வணங்கிவர பணம் சார்ந்த பிரச்னைகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

உத்திராடம்

அழகாலும், அறிவாலும் அனைவரையும் அன்புடன் நடத்தும் உத்திராட நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் விலகி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பது மனமகிழ்ச்சியைத் தரும். எதிரிகளால் இருந்துவந்த பிரச்னை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்துமுடிக்க அலைய வேண்டியிருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.கலைத்துறையினருக்கு பணவரவு அதிகப்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.

உங்களது ப்ளஸ் : உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உங்களது மைனஸ் : அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: தினமும் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட, உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9.

திருவோணம்

சொல் செயல் புத்தி ஆகிய அனைத்திலும் தூய்மையைக் கடைபிடிக்கும் திருவோண நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். அதேசமயம் கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அதோடு அவர்களது நலனுக்காகப் பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்னை தீரும்.

அரசியல்வாதிகளுக்கு நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போலத் தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.

உங்களது ப்ளஸ் : முக்கிய முடிவுகள் நல்ல தீர்வாக அமையும்.

உங்களது மைனஸ் : எதிர்பாராத செலவு ஏற்படும்.

பரிகாரம்: சந்திர தரிசனம் செய்வதால் மனக்குழப்பம் அகலும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

அவிட்டம்

வேகமான நடவடிக்கைகளால், மேற்கொள்ளும் காரியங்களில் லாபம் ஈட்டும் அவிட்ட நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் மட்டும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சனியின் சஞ்சாரம் யோகஸ்தானத்தில் இருப்பதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

உங்களது ப்ளஸ் : போட்டிகள் குறையும்.

உங்களது மைனஸ் : இடமாற்றம் ஏற்படும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வருவது நன்மையைத் தரும். குடும்ப பிரச்னை தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

சதயம்

உலக மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஸதய நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் துன்பம் வருவதுபோல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக மேற்கொண்ட அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும்வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். கலைத்துறையினருக்கு சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

உங்களது ப்ளஸ் : லாபம் அதிகரிக்கும்.

உங்களது மைனஸ் : எதிர்பார்த்த நிதி குறையலாம்.

பரிகாரம்: நாகதேவதையை வணங்கிவர காரியத்தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9.

பூரட்டாதி

கொடுத்த வாக்கினை உயிருக்குச் சமமாக மதிக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சகஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.

உங்களது ப்ளஸ் : வீண் கவலை அகலும்.

உங்களது மைனஸ் : பணவரத்தில் தாமதம் ஏற்படலாம்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனக்குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

உத்திரட்டாதி

குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர் வழியில் சென்று வாழ்க்கையில் வெற்றிபெறும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணவரத்து கூடும். ஆன்மிக செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும்போதும், வெளியூர்களுக்கு செல்லும்போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாட்டைக் குறைக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

உங்களது ப்ளஸ் : தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

உங்களது மைனஸ் : தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: நவகிரகங்களை வலம் வந்து, தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.

Source: Dinakaran

51104 total views