செவ்வாய் மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகள்!

Thayalan
Report Thayalan in ஜோதிடம்
1660Shares

செவ்வாய் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குரிய பலன்கள் கிடைக்கும். செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல்.

உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும், பெற்றோரிடம் பாசமின்மை, கண் நோய், தலையில் காயம், நெருப்பில் கண்டம், சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை, சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளுதல், சுய நலம், தற்புகழ்ச்சி முதலியன.

செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருந்தால்: தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம் பொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள். தாராளமனசு, ஊதாரி செலவு, கபடமற்ற வெளிப்படையான மனம், பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன நடைபெறும்.

செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருந்தால்: சகோதர வகையில் பிரச்சனை

செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருந்தால்: சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை, மார்பு வலி, இதய நோய், வாகன விபத்து, கல்வியில் மந்தம், உறவினர் சந்தோஷமின்மை, அரசியல் வெற்றி, தாயாருடன் தகராறு.

செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருந்தால்: புத்திர பிரச்சனை, கர்ப்பம் கலைதல்.

செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருந்தால்: ரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை.

செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருந்தால்: மனைவிகளால் ஏற்படும் பிரச்சனை.வாழ்க்கைத் துணை, திருமணம், மணவாழ்வு ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படும்.

செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருந்தால்: பாலின உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனை. ஆயுள் குறைபாடு, மாங்கல்யம் குறைபாடு, குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்.

செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருந்தால்: பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை,