பாம்பு கழுத்தில் மாலையாக விழுந்தால் இப்படி ஒரு அதிஸ்டமா..?

Report
92Shares

நாக தோஷம் என்பது ராகு, கேது ஆகியவைகளால் ஏற்படுவதாகும். ராகு கேது ஆகிய இருகிரகங்களும் அசுப கிரகங்கள்.

இவர்கள் சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களைக் காட்டிலும் அதிக தீமை பயப்பவர்கள்.

இவர்களுக்கு பனிரண்டு ராசிகளில், தமக்கென உரிய ராசி என்று ஏதும் இல்லை எனவே தாம் சஞ்சரிக்கும் ராசியை தமதாக்கி, கொள்வார்கள்.

அது மட்டும்மின்றி அந்தப் பாவத்திற்குரிய நற்பலன்களை நலிவடையச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்.

மேலும் அந்த பாவத்திற்குரிய பொறுப்பையும் ஏற்று செயல்படும் வலிமை பெற்றவர்கள். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் வலமாகச் சுற்றாமல் இடமாக சுற்றுவார்கள்.

அதனால் தான் பெரியவர்கள் நாகத்தைப் பார்த்து யோகத்தைச் சொல்ல வேண்டுமென்று குறிப்பிடுவார்கள். பொதுவாக நாக தோஷங்களில் மிகச் சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம்.

ஒருவர் பிறக்கும்போது கணிக்கப்படும் ராசி கட்டத்தில் ராகு-கேது ஆகியவர்களுக்கு இடையே மற்ற 7 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதையே கடுமையான கால சர்ப்ப யோக தோஷங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்டபடி ஜாதகம் அமையப் பெற்றவர்கள் வறுமை, துன்பம், வியாதி, தொழில் இழப்பு, பகை, அரக்கசுபாவம், திருமணத்தடை, புத்திர தோஷம் முதலான துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது.

தினமும் காலையில் சூரியபகவானை வணங்கி, திருஞானசம்மந்தப் பெருமான அருளிச் செய்த கோளறு பதிகம் 11 பாடல்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் முதலானவற்றை தினமும் பாராயணம் செய்து, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி முதலான புண்ணிய காலங்களில் விரதம் இருந்து ஒன்பது வாரங்கள் பரமேசுவரன் மற்றும் நவக்கிரகங்களை வழிப்படுகிறவர்களுக்கு இறையருளால் பகைவராலோ, கடனாலோ, நோய்களாலோ ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும்.

கனவுகளும் பலன்களும்

  • ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
  • இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
  • பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
  • பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
  • பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
  • காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு பணக்காரன் ஆகலாம்.

4498 total views