இன்றைய ராசிபலன்... உங்களது ராசிக்கு அதிர்ஷ்டம் எப்படி?

Report
963Shares
மேஷம்

கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்

இரவு மணி 7.16 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலைக் கழிக்கப்படுவீர்கள். இரவு மணி 7.16 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

உங்களின் கடின உழைப்பால் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வாகன வசதி பெருகும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

சிம்மம்

மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ளத் தொடங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். திடீரென்று அறிமுகமாகிறவரால் பயனடைவீர்கள். வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். இனிமையான நாள்.

கன்னி

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்ப்புகள் அடங் கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்

இன்றும் இரவு மணி 7.16 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்தில் இருப்பவர் களுடன் வளைந்து கொடுத்துப்போங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்

உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மனைவியுடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். இரவு மணி 7.16 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர் கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

எதிர்பார்த்த வேலை கள் தாமதமானாலும் எதிர் பாராத சில காரியங்கள் முடிவடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர் களின் பிரச்னைகள் தீரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

குடும்பத்தினரை கலந் தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர் கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

35364 total views